TNPSC தேர்வாணையம் தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 4 பணிகளுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மூலமாக கிட்டத்தட்ட 6,244 பல்வேறு துறைகளில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் மேலும் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தேர்வர்கள் எப்படியாவது அரசு வேலையை கையில் வாங்கிவிட வேண்டும் என்று ராப்பகல் பார்க்காமல் படித்து தங்களை தயார் செய்து வருகின்றனர். எனவே அப்படி படிக்கும் தேர்வர்களுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்று ஒரு சரியான யோசனை இல்லாமல் இருக்கும். அப்படி TNPSC குரூப் 4 தேர்வில் எந்தெந்த கேள்விகள் கேட்பார்கள், எதில் இருந்து கேட்பார்கள் என்ற குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
TNPSC குரூப் 4 என்னென்ன படிக்க வேண்டும்:
- பொதுவாக TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்கள் படிக்க வேண்டும்.
- தினசரி செய்திதாளில் வரும் நடப்பு செய்திகளை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
- இந்த தேர்வில் அதிகம் ஆப்டிடியூட் கேள்விகள் கேட்கப்படுவதால், ஆர்.எஸ் அகர்வாலின் ஆப்டிடியூட் புத்தகத்தை வாங்கி படிக்கலாம்.
- மேலும் இதற்கு முன் நடந்த தேர்வுக்கான வினாத்தாளை முழுவதுமாக பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான வினாத்தாளை கரைத்து குடிக்க வேண்டும்.
- அதே போல் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளில் வைக்கப்படும் தேர்வு மாதிரி வினாத்தாளை படித்தால் TNPSC குரூப் 4-க்கு உதவியாக இருக்கும்.
முதலிரவில் அதை காட்ட விபரீத முயற்சியில் ஈடுபட்ட மாப்பிள்ளை., ஏழு நாட்களில் பலியான மணப்பெண்.., என்ன நடந்தது?
இவைகளை படித்தால் போதும், நடக்கவிருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி கனியை பறித்து உங்களால் ஈசியாக சுவைக்க முடியும்.