கணவனை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதால் அவருடன் சேர்ந்து மனைவி மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணை கொலை:
நெதர்லாந்தின் கிறிஸ்டியன் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமாக விளங்கியவர் தான் டிரைஸ்-வான்-ஆக்ட். இவர் கடந்த 1977-ல் தொடங்கி 1982 ஆம் ஆண்டு வரை அந்நாட்டுப் பிரதமராக ஆட்சி புரிந்து வந்தார். மேலும் அவர் யூஜின் என்பவரை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை அதே லவ் பாசத்துடன் இருந்து வந்தனர்.
ஆனால் டிரைஸ்-வான்-ஆக்ட்க்கு 94 வயதை தொட்ட நிலையில், கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை குன்றி காணப்பட்டுள்ளார். இப்படி கஷ்டப்படுவதை பார்த்து வேதனை அடைந்த மனைவி யூஜின் நெதர்லாந்து அரசாங்கத்திடம் என்னையும், எனது கணவரையும் கருணை கொலை செய்யுமாறு மனு கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட, அரசு அவர்களுக்கு விசேஷ ஊசி போட்டு கருணை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலகியுள்ளது.