தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்ததால் காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. சொல்ல போனால் சந்தையில் காய்கறிகள் இறக்குமதி குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 22, கத்திரிக்காய் கிலோ ரூ.40, வெண்டைக்காய் கிலோ ரூ.50, வெங்காயம் ரூ.20, பீட்ரூட் கிலோ ரூ.55, முள்ளங்கி கிலோ ரூ.15, பீர்க்கங்காய் கிலோ ரூ.50, புடலங்காய் கிலோ ரூ.30, கேரட் கிலோ ரூ.75, இஞ்சி ரூ.110, காலிபிளவர் கிலோ 25, வெள்ளரிக்காய் கிலோ ரூ.12, முருங்கைக்காய் கிலோ ரூ.60 விற்பனையாகிறது.
குறிப்பாக பூண்டின் ஒரு கிலோ விலை சுமார் ரூ.500 முதல் ரூ.550 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி உச்சத்தை தொட்ட பூண்டின் விலை குறித்து பேசிய விவசாயிகள், கனமழை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் பூண்டு விதைத்து ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ததால் பூண்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.