ஷங்கருக்கு மாப்பிள்ளையாக போகும் துணை இயக்குனர்.., மகிழ்ச்சியை பகிர்ந்த அதிதி ஷங்கர்.., வெளியான புகைப்படங்கள்!!ஷங்கருக்கு மாப்பிள்ளையாக போகும் துணை இயக்குனர்.., மகிழ்ச்சியை பகிர்ந்த அதிதி ஷங்கர்.., வெளியான புகைப்படங்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஷங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என்ற இரு படங்களை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றே. இதில் அதிதி சங்கர் அப்பாவை சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். மகன் ஹீரோவாக சில வருடங்களில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால் மூத்த மகள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் அந்த திருமணம் அவருக்கு நினைத்தது போல அமையவில்லை. ஆறு மாதத்தில் மாப்பிள்ளை போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை தொடர்ந்து  நடிகை அதிதி ஷங்கரின் அக்கா ஐஸ்வர்யாவிற்கு துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களுடைய நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *