நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருப்பதால் அதற்கான பணிகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். மேலும் எந்த கட்சி யார் யாரோட கூட்டணி அமைத்து போட்டியிட போவது குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் சினிமாவின் மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருப்பது குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட போது, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் நான் உங்களை சந்திக்க நேரிடலாம். அப்போது கண்டிப்பாக மகிழ்ச்சியான செய்தியை கொடுப்பேன். இப்போதைக்கு இது தான் என்னோட பதில் என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

தமிழக பட்ஜெட் 2024-2025.., மகளிர் உரிமைத்தொகைக்கு அடித்த பம்பர் ஆபர்.., அமைச்சர் தென்னரசு முதல் தாக்கல் (LIVE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *