2024ம் ஆண்டுக்கான "இளம் விஞ்ஞானி" திட்டத்தில் சேர பள்ளி மாணவர்களுக்கு  இஸ்ரோ அழைப்பு - விண்ணப்பிப்பது எப்படி?2024ம் ஆண்டுக்கான "இளம் விஞ்ஞானி" திட்டத்தில் சேர பள்ளி மாணவர்களுக்கு  இஸ்ரோ அழைப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேருவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. நேற்று மாலை வானிலை மாற்றங்களை வேகமாக அறிந்து சொல்வதற்காக ஒரு செயற்கை கோளை ராக்கெட் மூலம்  அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிறிய வயதிலேயே சாதிக்க நினைக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பங்கேற்கும் மாணவர்களுக்கு இரண்டு வார கால வகுப்பறை பயிற்சி, போட்டிகள், ரோபோடிக் கிட், பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு உள்ளிட்டவைகள் அடங்கும். எனவே இந்த திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி https://jigyasa.iirs.gov.in என்ற சமூக வலைத்தளத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நாளை தொடங்கி வருகிற மார்ச் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ்  1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.          

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *