தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில், வருகிற 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று அறிவித்தார். மேலும் கட்சி பெயரில் எழுத்து பிழை இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து நிலையில் அதை திருத்தி சரி செய்தார் தலைவர் விஜய். இதனை தொடர்ந்து இன்று விஜய் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அந்த உறுதி மொழிகள் பின்வருமாறு,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- நம்முடைய நாட்டின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் போராடி உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
- மேலும் நம்முடைய தாய் மொழியான தமிழை காக்க உயிர் தியாகம் செய்த உயிர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், மத நல்லிணக்கம், சமத்துவம், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்க பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன்.
- மதசார்பின்மை, மக்களாட்சி, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகனாக கடமையாற்றுவேன்.
- சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் உள்ளிட்ட பெயரில் இருக்கும் வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன்.
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.
பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!
இப்படி தலைவர் விஜய் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.