ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாதம் கூட ஆகாமல் இருக்கும் நிலையில், அக்குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிசய குழந்தை
தற்போது இருக்கும் காலகட்டத்தில் மக்கள் எப்படியாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி பெரியவர்களே திக்குமுக்காடி இருந்து வரும் நிலையில் பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தின் முக்கிய பகுதியான நாடிகமாவை சேர்ந்த ஹேமா என்ற பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தற்போது தவக்க ஆரம்பித்த நிலையில் காய்கறிகள், பழங்கள், பறவைகள் புகைப்படங்கள் என 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை பார்த்த தாய் அந்த குழந்தையின் திறமையை வெளியே காட்ட வேண்டும் என்று அதை வீடியோ எடுத்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த நோபல் உலக சாதனை குழுவினர் ஆச்சரியப்பட்ட நிலையில் குழந்தை கைவல்யாவுக்கு உலக சாதனைக்கான சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர். இப்படி பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.