சோனியா காந்தி
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை MP ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி . மேலும் மத்திய பிரதேசத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், UPN என்று கூறப்படும் கூட்டணியின் சேர்மன் என்றும் சொல்லப்படும் சோனியா காந்தி அவர்கள் இந்த முறை மக்களவை தேர்தல் அல்லாமல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதற்கு தனது உடல்நலம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ராஜஸ்தானில் உள்ள தனது தொகுதி மக்களுக்கு கடிதம் வாயிலாக சோனியா காந்தி அறிவித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது அவர் ராஜஸ்தானில் மாநிலங்களவை எம்,பி யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தான் தலைமை செயலகம் அறிவித்துள்ளது. இதுவரை 5 முறை மக்களவை எம்.பி யாக இருந்த சோனியா காந்தி அவர்கள் தற்போது மாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனிமேல் மக்களவையில் அவரை பார்க்க முடியாது என்றும் இனிமேல் அந்த இடம் யாருக்கு செல்லும் என்று பல கேள்விகள் எழுகின்றன. மேலும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2 வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.