என்னது.., நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணமா?.., அதுவும் முன்னாள் முதலமைச்சரோடயா?.., புகைப்படம் வைரல்!!என்னது.., நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணமா?.., அதுவும் முன்னாள் முதலமைச்சரோடயா?.., புகைப்படம் வைரல்!!

நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணம்

நடிகர் ஷாம் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான வித்தியாசமான காதல் திரைப்படம் தான் இயற்கை. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா. இதையடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்த இவர் ரத்தன் குமார் என்பவரை கல்யாணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை டைவர்ஸ் செய்து விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் ரத்தன் குமார் காலமானதை தொடர்ந்து வெளி வட்டாரங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர், தற்போது ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ராதிகா முதல் கணவரை டைவர்ஸ் செய்து  கடந்த 2006ம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் எங்கள் கல்யாணம் குறித்து வெளியே தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்ததாக தெரிவித்தார். தற்போது அவரது குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமிர்தாவுக்கு தாலி கெட்ட பார்க்கும் கணேஷ்., திக்குமுக்காடிப்போன எழில்.., பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *