இலவச சிலிண்டர்
இந்தியாவில் வாழும் மக்களுக்கு மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருக்கும் திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் இலவச சிலிண்டர் எரிவாயு கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் பழங்குடியின குடும்பங்கள், பட்டியல் வகுப்பு, நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே இந்த இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் எப்படி இணைவது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
வழிமுறைகள்:
- இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் மேற்கண்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் https://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்
என்னது.., நடிகை ராதிகாவுக்கு திடீர் திருமணமா?.., அதுவும் முன்னாள் முதலமைச்சரோடயா?.., புகைப்படம் வைரல்!!
விண்ணப்பிக்க தேவையானவை:
இந்த உஜ்வாலா திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நகராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர் கையெழுத்திட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முகவரி ஆவணம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், பேங்க் பாஸ்புக் அல்லது ஜன்தன் பேங்க் அக்கவுண்ட்.