மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
பொதுவாக தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தொழிலாளர் பணியகம் மாதந்தோரும் நுகர்வோர் விலை புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது அதே போல் இந்த முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதனபடி தற்போதைய DA விகிதம் 46 சதவீதமாக இருக்கிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான விஷயம் என்றால் பயணப்படியாக தான் இருக்கும். டிஏவுக்குப் பிறகு, பயணக் கொடுப்பனவில் (DA ) கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 பரிசுகள் அடுத்த மார்ச் மாதம் உறுதி செய்யப்படும். அதாவது ,முதலில் அகவிலைப்படி அதிகரிப்பு, இரண்டாவதாக பயணப்படி அதிகரிப்பு மற்றும் மூன்றாவதாக HRA இல் திருத்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது அகவிலைப்படி 50 சதவீதம் இருக்கும். அதே சமயம் ஊழியர்களின் தகுதி தரத்திற்கேற்ப பயணப்படியும் உயர்த்தப்படும். மேலும் அவர்களின் புதிய கட்டணங்கள் 2024 ஹோலிக்கு முன் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.