அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பி.கந்தன் மீது மருமகள் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் தான் கே.பி.கந்தன். அவருடைய மகனான கே.பி.கே. சதீஷ்குமாருக்கு கடந்த 2018ம் ஆண்டு ஸ்ருதி பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மாமனார் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதாவது சதீஷ்குமாரின் கல்யாணத்திற்கு பெண் வீட்டு சார்பாக 1000 பவுன் நகை மற்றும் 1.5 கோடி மதிப்புள்ள கார் போன்றவை வழங்க வேண்டும் என்று கே.பி.கந்தன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி பெண் வீட்டார் சைடு இருந்து மாப்பிள்ளைக்கு 100 பவுன் மற்றும் பெண்ணுக்கு 500 பவுன் கொடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து மீதமுள்ள 400 பவுன் வேண்டும் என்று ஸ்ருதியை ரூமுக்குள் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாகவும், கணவர் அடித்த தடங்களை மறைக்க நானே வழுக்கி கீழே விழுந்து விட்டேன் என்று கூற சொல்லி வீடியோ எடுப்பார் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். மேலும் சதீஸ்குமார் தற்போது சென்னை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராகவும், சென்னை மாநகராட்சியின் 182 வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.