தென் தமிழகத்தை குறிவைத்த தளபதி விஜய்.., பக்காவா ஸ்கெட்ச் போட்ட த.வெ.க கட்சி - முதல் மாநாடு எங்கு - எப்போது?தென் தமிழகத்தை குறிவைத்த தளபதி விஜய்.., பக்காவா ஸ்கெட்ச் போட்ட த.வெ.க கட்சி - முதல் மாநாடு எங்கு - எப்போது?

தமிழக வெற்றிக் கழகம்

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவர் விரைவில் அரசியலுக்கு வர போகிறார் என்று கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை சொல்லி வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். அதன்படி கட்சிக்கு “தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த ஆண்டுக்குள் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் அதே நம்முடைய இலக்கு என்று கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி யார் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வைக்கிறார்களோ அவர்களுக்கு மாவட்ட அளவிலான பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் இந்த கட்சியின் நிறம் மற்றும் சின்னம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தலைவர் விஜய் புதிய கட்சியை தொடங்கிய நிலையில் அவரின் முதல் மாநாடு எங்கு நடக்க போகிறது என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி தென் மாவட்டங்களில் ஒன்றான மாமதுரையில் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் கட்சி ரீதியாக கிட்டத்தட்ட 100 மாவட்டங்களை உருவாக்கி, அதற்கான உறுப்பினர்களை நியமித்த பிறகு தான் மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த விஜயகாந்த் நெருங்கிய சொந்தத்திடம் ரூ.43 கோடி மோசடி – ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய கும்பல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *