சினிமாவா? அரசியலா?.., கட்சிதமாக காய் நகர்த்திய விஜய்?.., "கோட்" படத்தில் கையை வைத்த தளபதி!!சினிமாவா? அரசியலா?.., கட்சிதமாக காய் நகர்த்திய விஜய்?.., "கோட்" படத்தில் கையை வைத்த தளபதி!!

GOAT திரைப்படம்

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முதலாவதாக இருந்து வரும் நட்சத்திரம் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயணிக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  விஜய் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் அவரின் முதல் மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதால் கூட ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கினறனர்.

இணையத்தில் வெளியான உறுப்பினர் சேர்க்கை படிவம்?.., தவெக தலைமையகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *