மகளிர் உரிமைத் தொகை
தமிழகத்தில் வாழும் மகளிர்களுக்கு அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பெண்களின் நிதி நெருக்கடியை குறைக்கும் விதமாக கலைஞர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பல லட்ச மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் சிலர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி சில கருத்துக்களை முன் வைத்தார். அதில் அவர், ” நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று எல்லாருக்கும் தெரியும். ஒரு வேலை பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தால், தமிழக முதல்வர் வழங்கிய 1000 ரூபாய் உரிமை தொகை மக்களுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட பெண்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்,.