![புதிய சரித்திரத்தை சாதனையை பதிவு செய்த இந்தியா அணி., Bazball'க்கு முடிவுரை எழுதி அசத்தல்!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-287-jpg.webp)
இந்தியா வெற்றி
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கிய இங்கிலாந்து- இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. அதன்படி இந்த தொடரில் ஆரம்பித்த ஃபர்ஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2 வது மற்றும் 3 வது போட்டியை இங்கிலாந்து அணியை அசால்ட்டாக வீழ்த்தி இந்திய அணி வென்று அசத்தியது. இதனை தொடர்ந்து நான்காவது போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் நடைபெற்றது. எனவே இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தனது இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்திருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-272-jpg.webp)
இந்நிலையில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து 192 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி , 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றும் அசத்தியுள்ளது. இதன் மூலம் பெரிய சாதனை படைத்துள்ளது என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.