
அஜித்குமார் தாயார்
தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் டாப் 5ல் இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமார் தான். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ரெடியாகி வரும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சொல்ல போனால் டைட்டில் வெளியீட்டு 300 நாட்கள் கடந்த நிலையில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் லைகா நிறுவனத்திடம் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என சோசியல் மீடியா பக்கம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜித்தின் தாய், சகோதரர் குறித்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் அஜித்தின் தாய் உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார் என்று வருத்தமடைந்தனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.