![வருவாய் துறை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்.., சான்றிதழ்கள் வழங்கும் பணிகளில் ஏற்படும் சிக்கல்!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-291-jpg.webp)
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களும் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்ய இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/2-117-jpg.webp)
இதனை கருத்தில் கொண்டு, வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள்,வருவாய் அலுவலர்கள், துணை தாசில்தார்கள் உள்ளிட்ட 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.