![அரசு மருத்துவர்களுக்கு ஜாக்பாட்.., இனி வாரிசுகளுக்கும் வேலை உண்டு.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-293-jpg.webp)
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொதுவாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டால், அவருடைய பணி குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வசதி மருத்துவர்களுக்கு மட்டும் கிடையாது. இதுகுறித்து மருத்துவர்கள் பலரும் அரசிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-277-jpg.webp)
அதில் அவர், ” கருணை அடிப்படையில் எல்லா துறைகளிலும் வாரிசுகளுக்கு வேலை கொடுப்பது போல, மருத்துவ துறையிலும் தர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மருத்துவர்கள் பணியில் இருக்கும் போது இறந்தார் என்றால் அவருடைய வாரிசு மூன்று வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால் அவருக்கு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலர் உள்ளிட்ட மூன்று பணியில் ஒன்றில் நியமனம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.