பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

ரயில் கட்டணம் குறைப்பு

பொதுவாக மக்கள் தாம் நினைக்கும் இடத்திற்கு குறைந்த செலவுடன் மற்றும் வேகமாக செல்ல ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், சிறப்பு விரைவு ரயில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ஈரோட்டிற்கு செல்ல ரூ.50, ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு செல்ல ரூ.40 என கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கோவை-ஈரோட்டுக்கு ரூ.25, ஈரோடு-சேலத்துக்கு ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 200 கி.மீ.-க்கு குறையான தொலைவில் செல்லும் பயணிகள் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.  

1000 கோடி வசூலித்த அந்த படத்தை பார்க்க கூடாது.., நடிகை குஷ்புவை எச்சரித்த மகள்கள்.., எந்த படம் தெரியுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *