JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு போன்ற கட்சி பணிகளிலும் மற்றும் தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களாக பிஜேபி மற்றும் அதிமுக இரு பெரும் கட்சிகளும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முக்கிய புள்ளிகள் பிஜேபியில் இணைய இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுளளது.
ICUவில் மருத்துவர் பார்த்த வேலை?.., பாலியல் கொடுமைக்கு ஆளான 24வயது இளம் பெண்.., போலீஸ் கைது!!
அதிமுக வில் இணையும் பிஜேபி MLA க்கள் :
இன்று மதியம் பிஜேபி MLA க்கள் இரண்டு பேர் அதிமுக வில் இணைய உள்ளதாக கூறி அம்மன் அர்ஜுனன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அந்த இருவர் யார் என்ற விவரம் தெரிவிக்கவில்லை. மேலும் வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பிஜேபியில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.