முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். அவரை கைது செய்த போது அவரின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்ற நிலையில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு கிட்டத்தட்ட 15 முறை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அவர் ஒரு அமைச்சர் என்பதால் வெளியே வந்து சாட்சிகளை அழிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமலாக்கத்துறை வாதம் செய்ததால் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்தே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கேட்டு மனு வழங்கினார். அப்போது ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 28ம் தேதி ஒத்தி வைத்தது. இதனை தொடர்ந்து இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில், மீண்டும் ஜாமீனை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் அடுத்த 3 மாதத்தில் இந்த வழக்கை முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.