120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!

120 வருடத்திற்கு முன் மூழ்கிய கப்பல்

சமீப காலமாக கடலில் புதைந்து போன பொருட்களை தேடி ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 120 வருடத்திற்கு முன்னர் மாயமான கப்பலை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது கடந்த 1904 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகருக்கு நிலக்கரியை சுமந்து கொண்டு 240 அடி நீளம் கொண்ட “எஸ் எஸ் நெம்சிஸ்” சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் கொஞ்சம் கிலோமீட்டர் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக புயலில் சிக்கி கடலில் மூழ்கியது தொடர்ந்து, இதையடுத்து  மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாமல் போன நிலையில், சில நாட்கள் கழித்து கப்பலில் பயணம் செய்த சிப்பந்திகள் இறந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினர். முற்றிலும் தேடுதல் பணியை கைவிட்டனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 525 அடி ஆழத்தில் கிடந்த இந்த “எஸ் எஸ் நெம்சிஸ்” கப்பல் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து  இந்த கப்பலை படம் பிடித்து தேசிய அறிவியல் முகமை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  மேலும் இந்த கப்பலை கண்டுபிடித்தது புரெஸ்சினல் மரைன் சர்வீஸ் என்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *