“எதிர் நீச்சல்” சீரியல் நடிகை
சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் தொடர் தான். இந்த சீரியலில் ஹீரோயினாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. இவர் கடந்த 21ம் தேதி தனது ஆண் நபருடன் ஹோட்டலுக்கு சென்று வீடு திரும்பும் போது, காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது மெட்ரோ ரயில் பராமரிப்பு காரணமாக சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு ஒன்வே ரூட்டில் சென்றுள்ளார். அப்போது அதற்கு எதிராக காவலர் ஒரு பைக்கில் வர அவரை ஏற்றியுள்ளார். இந்த விபத்தின் போது மதுமிதாவுக்கு காலில் கையில் அடிபட்டது. அதே போல் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது குறித்து காவல்துறை விசாரணை செய்து கொஞ்சம் நேரத்திற்கு பிறகு தான் காரை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து அவர் குடித்துவிட்டு ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் பரவலாக பேச தொடங்கின. இந்நிலையில் இது குறித்து மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,” தற்போது சோசியல் மீடியாவில் தவறான செய்தி பரவி வருகிறது. விபத்து நடந்தது உண்மை தான். ஆனால் நான் குடிக்க வில்லை. காவலர் மருத்துவமனையில் நன்றாக தான் இருக்கிறார். இப்பொழுது நான் நல்லா தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.