பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சரத்குமாரின் முதல் மனைவி.., அட இந்த வாரிசு நடிகரோடையா?பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சரத்குமாரின் முதல் மனைவி.., அட இந்த வாரிசு நடிகரோடையா?

சரத்குமாரின் முதல் மனைவி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சரத்குமார். ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது வில்லனாக நடித்து ஹீரோக்களை மிரள வைத்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 1984ம் ஆண்டு சாயா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் என்ற பெண் இருக்கிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை தற்போது இவர் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சாயாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சாயா சிங் ஒரு படத்தில் நடித்துள்ளாராம். அதாவது பாலா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள வணங்கான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அவருடைய கேரக்டர் தான் படத்தில் திருப்பு முனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

ஆறு வருஷம் கழிச்சு குட் நியூஸ் சொன்ன தீபிகா படுகோனே.., இத்தனை நாள் தள்ளி போக ரன்வீர் தான் காரணமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *