JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ புற்றுநோயியல் துறையில் நடக்கும் திட்டத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி நிறுவனம்
துறை:
மருத்துவ புற்றுநோயியல் துறை
திட்டத்தின் பெயர்:
இந்தியாவில் குழந்தை பருவ கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவில் உயிர்வாழ்வதை மேம்படுத்துதல் (ISCALL): செயல்படுத்தல் ஆய்வு
பணிபுரியும் இடம்:
புதுச்சேரி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
திட்ட தொழில்நுட்ப அதிகாரி/ திட்ட தொழில்நுட்ப ஆதரவாளர் (திட்ட மேலாளர்) – 1
(Project Technical Officer/ Project Technical Support-III Project Manager)
திட்ட தொழில்நுட்ப வல்லுநர்/திட்ட தொழில்நுட்ப ஆதரவாளர் (தரவு மேலாண்மை) – 1
(Project Technician/Project Technical Support-II Data management)
தொழில்நுட்ப வல்லுநர்/உதவியாளர்/ திட்ட தொழில்நுட்ப ஆதரவாளர் (ஆய்வகம்) – 1
(Project Technician/Assistant/ Project Technical Support-II Lab)
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்/ திட்ட தொழில்நுட்ப ஆதரவாளர் – 1
(Laboratory Technician/ Project Technical Support-I)
செவிலியர் பணியாளர் – 1
(Staff Nurse/ Project Nurse)
மொத்த காலியிடங்கள் – 5
கல்வித்தகுதி:
திட்ட தொழில்நுட்ப அதிகாரி திட்ட மேலாளர் –
நர்சிங் / மருந்தியல் / சமூகவியல்/ஐடி/சிஎஸ்/வணிகவியல் (நிதி) ஏதேனும் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கிளினிக்கல் ஆராய்ச்சியில் மூன்று வருட அனுபவம் இருக்கவேண்டும்.
திட்ட தொழில்நுட்ப வல்லுநர் தரவு மேலாண்மை –
அறிவியலில் 12ஆம் வகுப்பு மற்றும் பொறியியல்/கணினி அறிவியல்/கணினி பயன்பாடு/எலக்ட்ரானிக்ஸ் & தகவல் தொடர்பு டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் ஐந்து வருடம் தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
தொழில்நுட்ப வல்லுநர்/உதவியாளர் ஆய்வகம் –
அறிவியலில் 12வது தேர்ச்சி மற்றும் MLT/DMLT டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், ஐந்து வருட
தொடர்புடைய துறையில் பணி அனுபவம் இருக்கவேண்டும்.
BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 80K சம்பளத்தில் மத்திய அரசின் சிறந்த வேலை !
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்-
10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LT/DMLT டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், இரண்டு வருடம்
தொடர்புடைய துறையில் அனுபவம் இருக்கவேண்டும்
செவிலியர் பணியாளர் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பத்தர்களுக்கு பதவிக்கு ஏற்ப அதிகபட்சமாக 28,30,35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
திட்ட தொழில்நுட்ப அதிகாரி & செவிலியர் பணியாளர் – ரூ.33,040/-
திட்ட தொழில்நுட்ப வல்லுநர் – ரூ.23,600/-
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் – ரூ.21,240/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து அதன் நகலை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
மின்னஞ்சல் முகவரி: icmrextramural.leukemia@gmail.com
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 10.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.