சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிற 6ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்று ஒரு நாள் மட்டும் மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.