ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு ! மத்திய மந்திரி சபை ஒப்புதல் ! 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை திட்டம் - முழு விவரம் இதோரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு ! மத்திய மந்திரி சபை ஒப்புதல் ! 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை திட்டம் - முழு விவரம் இதோ

வீடுகளின் மேற்க்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “பிரதான் மந்திரி சூர்யா கர் : முப்தி பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 1 கோடிக்கு அதிகமான வீடுகளின் மேற்க்கூரையில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ரூ.75,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலம் பல குடும்பங்களின் வாழ்வாதார சூழ்நிலை மேம்படும் என்றும், ஒரு குடும்பத்திற்க்கு தேவையான மின்சார தேவையை இந்த திட்டத்தின் மூலம் எளிதாக பூர்த்தி செய்யலாம். மேலும் இது தொடர்பாக மத்திய மந்திரி சபை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது,

இந்தியாவில் உள்ள ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் – தளபதினா சும்மாவா!!

மேலும் மத்திய அரசு செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோ வாட் மின்சார அமைப்புக்கு ரூ.30,000 மற்றும் 2 கிலோ வாட் மின்சார அமைப்புக்கு ரூ.60,000 மானியம் பெறலாம். இதன் மூலம் அந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *