மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
நாட்டின் பல மாநிலங்களில் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். அதில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை உள்ளிட்டோர் இன்று 3 ஆயிரத்து 302 மையங்களில் தேர்வு எழுத இருக்கின்றனர். மேலும் இந்த 7.72 லட்சம் பேரில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வை கண்காணிக்க கிட்டத்தட்ட 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி தேர்வில் ஏதேனும் முறைகேடு நடக்காமல் இருக்க 4 ஆயிரத்துக்கும் மேல் பறக்கும் படையினர் அமைத்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு செயல்பாடுகளில் சுணக்கம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை இன்று சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா தேர்வு செயல்பாடுகளில் சுணக்கம் காட்டி இருப்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு நடப்பதற்கு முன்பே ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.