டாஸ்மாக் நிர்வாகம்
இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து விவாதம் போய் கொண்டிருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேற்று தலைமைச் செயலகத்தில் காவல் துறையிடம் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மொத்தமாக மதுபானங்களை விற்க கூடாது என்று அதற்கு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கமான விற்பனையை விட கூடுதல் விற்பனைக்கு விற்க கூடாது என்று, கவனமாக செயல்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.