Breaking News: கடலுக்கு மேல் கயிற்றில் நடந்து சென்று சாதனை: உலக முழுவதும் சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களால் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ் என்பவர் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.
கடலுக்கு மேல் கயிற்றில் நடந்து சென்று சாதனை
அதாவது, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ் இத்தாலியில் உள்ள மெஷினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை கிட்டத்தட்ட 3.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கயிற்று பாலத்தில், சுமார் 2.5 கிலோ மீட்டர் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக சொல்ல போனால் கடலுக்கு மேல் 100 அடி உயரத்தில் இருக்கும் இந்த கயிற்று பாலத்தில் 2.7 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 2.57 மணி நேரத்தில் நடந்து சென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!
தடுக்கி விழுந்தால் பரலோகம் என்று தெரிந்தும் கூட, தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் கயிற்றில் நடந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்