Home » செய்திகள் » கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் – பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் – பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் - பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கூறியுள்ளது.

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அந்த வகையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நிலுவைத் தொகை பாக்கி காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தவில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

மேலும் இதனை பசுமைப் பூங்காவாக மாற்றத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *