திருநெல்வேலியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருநெல்வேலி :
தற்போது திருநெல்வேலி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே அரிவாள் வெட்டு கலாச்சாரம் என்பது தற்போது அதிகரித்து வருவதாக அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் ஒரு விதமாக திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாணவர் ஒருவர் அரிவாளுடன் வந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாளுடன் வந்த மாணவர் :
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவன், சக மாணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சம்மந்தப்பட்ட மாணவனை மிரட்டுவதற்கு அரிவாளை புத்தகப் பையில் வைத்து எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவனின் புத்தகப் பையை சோதனை செய்துள்ளனர். அப்போது பையில் அரிவாள் இருந்தது தெரியவந்தது.
மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ் – இனி விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்!
இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களையும் போலீசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அந்த வகையில் பள்ளிக்கு மாணவன் அரிவாளுடன் வந்தது திருநெல்வேலியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.