Home » செய்திகள் » வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !

நீலகிரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை. ஆற்றை கடக்கும் போது அதில் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு யானை ஒன்று அடித்து செல்லப்பட்டது. பின்னர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு யானை கரை ஏறியது. அதுவரை மற்ற யானைகள் பாச போராட்டம் நடத்தியது. தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிறது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவ மழை அதிகமாகி உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மண் சரிவும் ஏற்படுகிறது. கூடலூர் ஓவேலி வனப்பகுதியில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலியில் கேரளாவுக்கு செல்லும் குண்டம்புழா ஆற்றை நேற்று முன்தினம் 4 காட்டு யானைகள் கடக்க முயன்றது. அப்போது ஒரு காட்டு யானையை மட்டும் வெள்ளம் அடித்து சென்றது.இருப்பினும் யானை வெள்ளத்தை சமாளித்தவாறு ஆற்றை கடக்க முயன்றது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆனால், நேரம் செல்ல செல்ல தண்ணீரின் வேகம் அதிகமாகியது. அந்த யானையால் ஆற்றை கடக்க முடியவில்லை. இதனால் 100 அடி தூரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த யானை தண்ணீரில் மூழ்கியது. ஆனாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் அந்த யானை அதன் தும்பிக்கையை உயர்த்தியவாறே வெள்ளம் போன போக்கில் சென்றது.

Join WhatsApp Group

இவ்வாறு பல கட்டமாக போராடி அந்த காட்டு யானை ஒருவழியாக ஆற்றை கடந்து கரையோரம் வந்தது. அதே சமயம் மற்ற காட்டு யானைகளும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானையை எதிர்பார்த்து கரையோரம் நின்று கொண்டிருந்தன. பின்னர் கரையேறிய யானையுடன் மற்ற யானைகளும் சேர்ந்து வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சியை கரையோரம் இருந்த சில வாலிபர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top