Home » செய்திகள் » ஆறு முறை பாம்பு கடித்தும் சாகாத இளைஞன் – பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் தகவல்!!

ஆறு முறை பாம்பு கடித்தும் சாகாத இளைஞன் – பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் தகவல்!!

ஆறு முறை பாம்பு கடித்தும் சாகாத இளைஞன் - பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் தகவல்!!

Breaking News: ஆறு முறை பாம்பு கடித்தும் சாகாத இளைஞன்: இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு இளைஞனை ஆறு தடவை பாம்பு கடித்த போதிலும், அவர் உயிருடன் இருந்து வரும் சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாஸ் துபே தன்னுடைய வீட்டில் அடிக்கடி பாம்பு கடிக்கிறது என்று தனது பெற்றோர்களிடம் கூறி வந்துள்ளார். பாம்பு கடித்த ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.

இப்படி இருக்கையில் அந்த இளைஞரின் உயிரை காப்பாற்ற நினைத்த பெற்றோர் விகாஸ் துபேவை தன்னுடைய அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த பாம்பு விடாமல் துரத்தி அத்தை வீட்டுக்கே வந்து தன்னை கடித்ததாக வேதனை அடைந்துள்ளார்.

Also Read: First Night-ல் இருந்து வீடியோ வெளியிட்ட புது தம்பதி – சோசியல் மீடியாவை கலக்கும் video!!

அதுமட்டுமின்றி அவன் பாம்பு கடிக்க வருவதை முன்கூட்டியே உணர்வதாகவும், குறிப்பாக தன்னை சனி மற்றும் ஞாயிற்று கிழமை மட்டுமே பாம்பு கடிக்கிறது என்று கூறியுள்ளார். கடந்த 38 நாட்களில் இதுவரை 6 தடவை தன்னை பாம்பு கடித்ததாகவும், மருத்துவர்களின் உதவியால் உயிருடன் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top