
ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி: தற்போது மக்களின் முக்கியமான அடையாள அட்டையில் ஆதார் கார்டும் ஒன்று. இந்த ஆதார் கார்டு மூலமாக தான் அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெறுவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி
எனவே அரசின் நலத்திட்டங்களை உடனே பெற பல்வேறு துறைகளில் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக ஆதார் கார்டு தொடர்பான மோசடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனை கட்டுப்படுத்த தான் கடந்த 2016ம் ஆண்டு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.
அதன்படி ஆதார் கார்டு வாங்கியதில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது வரை மக்கள் சிலர் புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக தான் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்கும் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்தது. இருந்தாலும் மக்கள் புதுப்பிக்காமல் தான் இருந்து வருகிறார்கள். தற்போது அவர்களுக்காக ஒரு குட் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. aadhaar card free renewal
Also Read: YouTube Premium சேவை கட்டணம் உயர்வு – ஆத்தி எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
அதாவது, ” அடுத்த மாதம் செப்டம்பர் 14ம் தேதி வரை கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் https://myaadhaar.uidai.gov.in/ என்ற சமூக வலைத்தளத்திற்குள் சென்று தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனவே தற்போது வரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பையும் தவிர விட்டீர்கள் என்றால் செப்.14ம் தேதிக்கு பின்னர் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க முடியும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை