Home » செய்திகள் » ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி - இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

தனி மனிதனின் முக்கிய ஆவணமான ஆதார் கார்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டு ஜூன் 14 தான் கடைசி என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

Aadhaar Card:

ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், ஆதார் அட்டையை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. எனவே இதற்காக மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது, செல்போன் எண் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற உள்ளிட்ட மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களாகவே மக்களை அறிவுறுத்தி வருகிறது.

மேலும், அதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன் பிறகும் மக்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்யாமல் இருந்ததால், வருகிற டிசம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.  

அதாவது, மக்கள் தங்கள் ஆதார் காரட்டில் இருக்கும் பெயர், முகவரி போன்றவற்றை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மாற்றி கொள்வதற்கு இன்று (14.12.2024 ) வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  மக்களின் நலன் கருதி தற்போது ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி – மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top