ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் :
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பியாக இருப்பவர் சுவாதி மலிவால். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததின் பேரில் தான் அங்கு சென்றதாகவும், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து அவரது தனி உதவியாளர் பிபவ் தன்னை தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !
தற்போது தான் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில் பெண் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.