ஆவின் ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு 1967 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள 713 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சுமார் 17910 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தின் கீழ் மொத்தம் 60 பால் குளிரூட்டும் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தற்போது கால்நடை ஆலோசகர் காலிப்பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை கீழ்க்காணலாம். aavin recruitment 2024 madurai
ஆவின் ஆட்சேர்ப்பு 2024
அமைப்பு:
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்
காலிப்பதவியின் பெயர் & எண்ணிக்கை:
கால்நடை ஆலோசகர் – 1
கல்வித்தகுதி:
கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பட்டம். ஆவின் ஆட்சேர்ப்பு 2024
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை ! ஒரு நாளைக்கு ரூ.471 சம்பளம் !
இதரத்தகுதி:
ஓட்டுநர் உரிமத்துடன் கார் அல்லது இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.43,000 மாதம்
வயதுத்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு கீழ் இருக்கவேண்டும்.
OFFICIAL NOTIFICATION | CLCIK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.01.2024 அன்று காலை 9.30 மணிக்கு நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ள விண்ணப்பபடிவம் மற்றும் இதர ஆவணங்களுடன் மதுரை அலுவலக பிரதான வளாகத்திற்கு செல்லவேண்டும். aavin recruitment 2024 madurai
மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.