தமிழ் சினிமாவில் 80 ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகை நளினியை அர்ஜுன் காதலித்துள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை நளினியை காதலித்த அர்ஜுன்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகராக இருந்து வரும் இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘நன்றி’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அந்த படத்தில் அவருடன் சேர்ந்து நளினி, கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். அந்த படத்தின் போது நடிகை நளினி மீது காதல் மலர்ந்துள்ளது. ஒருதலை காதல் செய்து வந்த அர்ஜுன், தனது காதலை நளினியிடம் கூற சென்றுள்ளார். இந்த சமயத்தில் நளினி நடிகர் ராமராஜனை காதலித்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த அர்ஜுன், தன்னுடைய காதலை கடைசிவரை நளினியிடம் கூறாமல் தனது மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாராம்.
மேலும் ராமராஜனுக்கும் நளினிக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் நளினியை காதலித்து அது ஒருதலை காதலாக மாறியது.
Also REad: தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – கடைசியில் நடந்தது என்ன?
தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?
விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?
10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்
ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி