குட் பேட் அக்லி:
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்:
‘குட் பேட் அக்லி’ படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. மேலும் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது. படம் வெளியாவதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘குட் பேட் அக்லி’ முதல் நாளில் ரூ.30 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.