சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்? எந்த சேனல் பக்கம் போறாரு தெரியுமா?சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்? எந்த சேனல் பக்கம் போறாரு தெரியுமா?

Kollywood Cinema News: சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்: தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் அர்ஜுன். இவர் கெரியரில் எத்தனையோ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக ஏழுமலை, ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

கடைசியாக தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அர்ஜுன் விரைவில் சீரியலில் காலடி எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஜீ தமிழ் சேனலில் தான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள் – என்னது ஹன்சிகா சீரியல்ல நடிச்சிருக்காங்களா?

ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அர்ஜுன் அதே சேனலில் ஏற்கனவே சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இதற்கிடையில் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை நடத்தி முடித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *