சினிமாவில் எத்தனையோ நபர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது வரை உழைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே சினிமா என்ற தாயிடம் இருந்து பாசம் என்ற வாய்ப்பு கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைத்து கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு நபரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். சினிமாவுக்குள் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் ஓகே தான் என்று கிடைத்த வாய்ப்பை எல்லாம் ஏற்று நடித்தார். இந்த எண்ணத்தால் மட்டுமே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி ரஜினி, கமல் என அப்போது உச்சத்தில் இருந்த எல்லா நடிகர்களுடன் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு சினிமா கெரியரில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து, காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் குழந்தைகளை கவர்ந்து இழுத்தார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இயக்குனர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் உள்ளிட்ட பல பரிமாணங்களில் தென்பட்டார். அந்த மிமிக்ரியால் தான் அவர் உலகமெங்கும் பாப்புலர் ஆனார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஏற்று நடித்து வருகிறார்.
அட்ரா சக்க.., “சூர்யா 43” படத்தில் இணைந்த வாரிசு நடிகை.., வெளியான முக்கிய தகவல்!!!
அவர் வேறு யாரும் இல்லை, நம்ம நடிகர் சின்னி ஜெயந்த் தான். இந்நிலையில் அவர் மறைந்த காமராஜர் ஐயாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய 7 வயதில் அய்யா காமராஜர் முன்பு பாட்டு பாடினேன். அப்போது அவர் என்னை நீ நல்ல கலைஞனாய் வருவாய் என்று ஆசீர்வதித்தார். வாழ்க்கையில் அந்நாளை தற்போது வரை மறக்க முடியாத தருணம்” என்று சின்னி ஜெயந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.