தற்போது தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி யை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
இட்லி கடை திரைப்படம்:
தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி: நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற திரை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
மேலும் இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுது ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு!
ரிலீஸ் தேதி அறிவிப்பு:
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.