தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு: கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்று நடிப்பதில் ரசிகர்களை அலறவிட்ட நடிகர் தான் தனுஷ். தற்போது இவரின் 50 வது படமான “ராயன்” படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Also ReadL: சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி  – அட அதுவும் “இந்தியன் 2” பட நடிகரோடய?

தற்போது அந்த வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது. மேலும் அதிரடி ஆக்சனாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரைலரை பார்த்த படத்தை கானா ஆவலோடு இருந்து வருகிறார்கள் ரசிகர்கள். இதனை தொடர்ந்து தனுஷ் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  Kollywood news – box office collection king – cinema news – cinema news in tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *