பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை?பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை?

பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை: தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் காமெடியில் பின்னி பெடல் எடுத்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவருடைய முக பாவனைகளும், குரலும் மற்ற நடிகர்களை விட தனித்து தெரிந்ததால் தான் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இவர் கடைசியாக 96 படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துடன் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். actor janagaraj latest news.

அதாவது, ” நடிகர் ஜனகராஜ்  ‘தாத்தா’ குறும்படத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் பல பேரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நம்ம ஜனகராஜா இது? இப்படி உருக்குலைந்து போன தோற்றத்தில் காணப்பட்ட அவரை பார்த்து வருத்தமடைந்தார். அப்படி அவருக்கு என்னதான் ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் இருந்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு சென்ற போது ஒருவர் எங்கள் கார் மீது கல்லை தூக்கி எறிந்தார். அப்போது அந்த கல் என் முகத்தை பதம் பார்த்தது. இதனால் பலத்த காயம் அடைந்தேன். உடனே மருத்துவமனையில் சேர்த்த போது நர்ஸ் என்னை கண்ணாடியை பார்க்காதீர்கள் என்று கூறினார்.

நான் அதையும் மீறி கண்ணாடியை பார்த்தேன். என் முகம் முழுவதும் வீங்கி போய் இருந்தது. அப்போதே நினைத்தேன் என்னுடைய சினிமா வாழ்க்கை காலி என்று. பல் ஒரு பக்கம் பல் முழுக்க கொட்டி விட்டது. தாடை எலும்பு உடைந்து விட்டது. அதெல்லாம் அறுவை சிகிச்சையில் சரி செய்தார்கள். சில மாதங்கள் படுத்தப்படுக்கையாகவே கிடந்தேன். அதன்பிறகு தான் பாரதிராஜா வந்து தனது அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ என்று கூறினார். அதுவும் ராதாவுக்கு ஜோடி சென்று கூறினார். ஆனால் அப்போது என்னால் பண்ண முடியாத நிலையில் அதில் இருந்து விலகிவிட்டேன். அந்த படம் தான் காதல் ஓவியம். அது எப்படி பட்ட படும் என்று எல்லாருக்கும் தெரியும். kollywood news in tamil – kollywood box office collection – kodambakkam cinema- பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை?

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர் – இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *