Home » செய்திகள் » பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி - எதற்கு தெரியுமா ?

நடிகர் கார்த்தியின் லட்டு தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி. அத்துடன் நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனது மெய்யழகன் பட புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர்கள் லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர் இதற்கு அவர் அளித்த பதில் அவரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது.

பட புரமோஷனுக்காக வந்த நடிகர் கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘லட்டு வேணுமா’ என்று நகைச்சுவையாக கேட்டதற்கு, நடிகர் கார்த்தி அளித்த பதில் தான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

அதாவது லட்டு என்பது இப்போது மிகவும் சென்சிடிவான ஒரு விஷயம், அதைப் பற்றி பேசக்கூடாது என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். ‘தற்போது லட்டு பற்றி பேசவே கூடாது’ என்றும் கார்த்தி கூறி இருந்தார்.

மேலும் நாடு முழுவதும் லட்டு என்பது மிகவும் விவாத பொருளாக மாறிவிட்ட நிலையில் அதைப் பற்றி குறைவாக பேசுவதே நல்லது என்று கார்த்தி கருத்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து லட்டு குறித்து நடிகர் கார்த்தி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் கூறிய கருத்துக்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் லட்டு பற்றி நகைச்சுவை பேசுறாங்க ஒரு பட விழாவுல லட்டு என்பது ஒரு முக்கியமான விஷயம்னு ஒரு ஹீரோ சொன்னாரு. மறுபடியும் இனிமே அப்படி சொல்லாதீங்க, நூறு தடவை யோசிச்சு பேசுங்க. சனாதன தர்மத்தை காப்பாத்துங்க என்று பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நியமனம் – முழு தகவல் இதோ !

அதன் பின்னர் பவன் கல்யாண் கொடுத்த வார்னிங்கை தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளம் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதுபற்றி அவர் போட்டுள்ள பதிவில், பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

அத்துடன் நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் வெங்கடேஷ்வராவின் பக்தனாக எப்போதும் பண்பாட்டுடன் பிடிப்பாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top