Home » சினிமா » கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கலகலப்பு actor kothandaraman death

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் திரைஉலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது கலகலப்பு தான்.

இந்த படத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தானர்.

மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவருடைய கேங்கில் முக்கிய நபராக நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார் நடிகர் கோதண்டராமன்.

சந்தானத்துடன் இவர் இணைந்து செய்யும் லூட்டி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

குறிப்பாக அந்த படத்தில் ” அம்மாவ பிடிச்சுட்டேன் அம்மாவ பிடிச்சுட்டேன்” என்ற காமெடி சீன் இப்பொழுது கூட டிவியில் பார்த்தால் சிரிப்பு வரும். மேலும் கோதண்டராமன் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.

actor kothandaraman death

அடுத்து காமெடி அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த நிலையில், கோதண்டராமன் காலமாகி விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 65 வயதாகும் நடிகர் கோதண்டராமன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிபட்டு வந்து உள்ளார்.

Join WhatsApp Get Latest Update

இதன் காரணமாக அவர் வீட்டிலயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது..இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Tamil Cinema News Latest Update

டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top