பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
சொத்து பிரச்சனை:
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.
நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!
இதனால், தெலுங்கு திரைத்துறையில் புகழ்பெற்ற குடும்பமாக இருந்து வருகின்றனர். ஆனால், அவரது வீட்டில் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் சொத்து பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன் பாபு காவல் நிலையத்தில் திடீரென புகார் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சொத்து பிரச்சனை காரணமாக தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!
இப்படி இருக்கையில் நேற்று, ரத்த காயத்துடன் மனோஜ், காவல்துறை 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் மோகன்பாபு தாக்கியதாக புகார் அளித்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் மனோஜ் காயங்களுடன், கழுத்தில் பெல்ட் அணிந்து கொண்டிருந்த போட்டோக்கள் வைரலாகியது. ஆனால், இதற்கு மோகன் பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!
சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?